Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

2ஆவது நாளாக உச்சகட்டம்…. இல்லாத அளவு உயிரிழப்பு…. திணறும் தமிழகம் ..!!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இரண்டாவது நாளும் 97 கொரோனா உயிரிழப்பு  ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதில், தமிழகத்தில் இன்று மேலும் 97 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3,935 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 5,881 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 2,45,859ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,013 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் 99,794ஆக எகிறியுள்ளது. இன்று புதிதாக 5,778 குணமடைந்து வீடு திரும்பியதால், 1,83,956 கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். நேற்று இன்று என இல்லாத அளவாக 97 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |