தமிழகத்தில் நேற்று ஒரு மாவட்டமும் தப்பாத அளவுக்கு 37 மாவட்டங்களிலும் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று மட்டும் 5,881 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,45,859ஆக அதிகரித்தது. 5,778பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 1,83,956பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். சென்னையில் மட்டும் 1,013 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 99,794 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 12,765 சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 74.82 % குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா உயிரிழப்பு 3,935 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 58,350 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 25,60,269பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 57,968ஆக அதிகரித்துள்ளது. தமிழக்தில் நேற்று எந்த மாவட்டமும் தப்பாமல் 37 மாவட்டத்தில் பாதிப்பும் 24மாவட்டங்களில் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது அரசை நொந்து போக வைத்துள்ளது.
மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு :
சென்னை 21
திருவள்ளூர் 10
கன்னியாகுமரி 6
விருதுநகர் 6
தேனி 5
திருப்பத்தூர் 5
திருவண்ணாமலை 5
தூத்துக்குடி 4
கோயம்புத்தூர் 4
மதுரை 4
திண்டுக்கல் 4
வேலூர் 4
திருநெல்வேலி 3
செங்கல்பட்டு 2
கடலூர் 2
ராமநாதபுரம் 2
ராணிப்பேட்டை 2
தஞ்சாவூர் 2
தர்மபுரி 1
அரியலூர் 1
கள்ளகுறிச்சி 1
காஞ்சிபுரம் 1
நாமக்கல் 1
சேலம் 1