Categories
Uncategorized

நீங்க யாருக்கு ராக்கி கட்டுறீங்களோ….. அவங்க உங்கள கிருஷ்ணர் போல் பாதுகாப்பாங்க….!!

ரக்ஷபந்தன் பண்டிகைக்கு தொடர்பாக பல வரலாற்று கதைகள் உள்ளன அதில் ஒரு கதை பெருங்காவியமான மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாண்டவர்களின் மனைவியான திரௌபதி போர்க்களத்தில் பகவான் கிருஷ்ணன் அவர்களுக்கு ஏற்பட்ட காயத்தால் வடிந்த இரத்தத்தைத் தடுப்பதற்காக அவரது புடவையின் ஒரு பகுதியைக் கிழித்து பகவான் கிருஷ்ணனின் மணிக்கட்டில் கட்டினார். இந்நிகழ்வு கிருஷ்ண பரமாத்மா அவர்களின் ஆழ்மனதைத் தொட்டதால் அவர் திரௌபதியைத் தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு உறுதி பூண்டார்.

மேலும் அவர் தீய சக்திகளிடம் இருந்தும் பிரச்சினைகளில் இருந்தும் திரௌபதியை பாதுகாப்பதாகவும் அவருக்கு உறுதியளித்தார். அவரளித்த உறுதியைக் காப்பாற்றும் விதமாக சூதாட்டத்தில் கௌரவர்களிடம் பாண்டவர்கள் தோற்றதால் திருதராஷ்டிராவின் நீதிமன்றத்தில் சிர்ஹர நேரத்தில் திரௌபதியின் மானத்தைக் காப்பாற்றினார் பகவான் கிருஷ்ணன்.

இந்த நிகழ்வே பின்னாளில் ரக்ஷபந்தன் விழாவாகவும் ராக்கி கட்டும் பரம்பரியமாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி நாம் யாருக்கு ராக்கி காட்டுகிறோமோ அவர்கள் நம்மை சகோதரியாக ஏற்று கிருஷ்ணர் போல் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கையிலையே இந்த விழாவானது கொண்டாடப்படுகிறது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |