Categories
தேசிய செய்திகள்

டிஸ்சார்ஜ்க்கு பின்…. இதை செய்தால் ரூ5,000 ஊக்கத்தொகை….. மாநில அரசு அறிவிப்பு…!!

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்தால் அவர்களுக்கு ரூபாய் ஐந்தாயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது. 

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறையில் பிளாஸ்மா சிகிச்சை முறை என்பது பல மாநிலங்களில் பயன்படுத்தக்கூடிய முக்கிய சிகிச்சை முறையாகும்.

இந்த சிகிச்சைக்கு மனித உடம்பில் இருக்கக்கூடிய பிளாஸ்மா செல் தேவைப்படுவதால் அதனை தானம் செய்ய மக்கள் முன்வருமாறு பல்வேறு மாநில அரசுகள் தொடர்ந்து மக்களை வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், ஆந்திராவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால்  நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அம்மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பிளாஸ்மா சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சிகிச்சை முறை நல்ல பலனை தருவதால், மக்களை பிளாஸ்மா தானத்தில் ஈடுபடுத்த வேண்டுமென்பதற்காக அம்மாநில அரசு சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில், கொரோனா தொற்று நோயிலிருந்து குணமடைந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்தால் ரூபாய் ஐந்தாயிரம் அவர்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

Categories

Tech |