ஆப்பிரிக்காவில் 7000க்கும் மேற்பட்ட மாணவிகள் கர்ப்பமாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக உலக நாடுகள் பொதுவாக கையில் எடுக்கக் கூடிய ஒரு ஆயுதம் ஊரடங்கு உத்தரவு தான். இந்த உத்தரவின் காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடிய இடங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருந்து வருகின்றனர். அதன்படி,
பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் உலக அளவில் தற்போது மூடப்பட்டு மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே கல்வி கற்று வருகின்றனர். அந்த வகையில் கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மலாவியில் கொரோனா காரணமாக கடந்த 5 மாதங்களாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு உள்ளது. பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ள இந்நேரத்தில் மட்டும்,
அந்நாட்டில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் கர்ப்பமாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் பல மாணவிகள் 10 முதல் 14 வயதுக்குள் உள்ளதாகவும் குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த செய்தி உலக நாடுகள் நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.