விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு நம்பிக்கையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் இலக்கு படிப்படியாக நிறைவேறும். கொஞ்சம் கடன் பெறுகின்ற நிலை இருக்கும். கண்களின் பாதுகாப்பில் கவனமாக இருங்கள், கணவன் மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மையை கொடுக்கும். பிள்ளைகளின் கல்வியில் கவனமாக இருங்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாளாக தானே இன்று இருக்கும். பயணிகள் மூலம் காரியத்தில் ஈடுபடும். எச்சரிக்கையாக பேசுவது நல்லது.
உச்சத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு கொடுக்கல் வாங்கலில் ரொம்ப கவனம் வேண்டும். சமையல் செய்யும் பொழுதும் ரொம்ப கவனமாக தான் செய்ய வேண்டும். அதே போல உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கும் தீ ஆயுதங்களை பயன்படுத்தும் பொழுதும் ரொம்ப கவனமாக இருங்கள். யாரிடமும் புதிதாக ஏதும் இப்போதைக்கு வாங்க வேண்டாம். உடல் ஆரோக்கியத்தை பொருத்த வரை எந்தவித பிரச்சினையும் சுமுகமாகவே இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்குஅதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் ஆரஞ்சு நிறம்.