Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…தெய்வ பக்தி அதிகரிக்கும்…எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்…

மகர ராசி அன்பர்களே …! இன்று முக்கியமான விஷயத்தில் சுமூக தீர்வு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற கூடுதலாகவே பணிபுரிவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். கூடுதல் சொத்து வாங்க அனுகூலம் உருவாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இன்று தெய்வ பக்தி அதிகரிக்கும்,அதற்க்காக  சிறு தொகையைச் செலவிடுவீர்கள். பயணங்கள் ஓரளவு மகிழ்ச்சியை கொடுக்கும். ஆனால் உன்னுடைய பேச்சில் வீண்பழி உருவாகலாம் அதை மட்டும் கவனமாக கையாளுங்கள். வேலையில் மாற்றம் கொஞ்சம் உண்டாகலாம்.

மருத்துவச் செலவுகள் இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சில சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். மற்றவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பதுநல்லது. திறமையாக செயல்பட்டு காரியங்களை செய்து முடிப்பீர்கள். மன வருத்தத்தை கொடுக்கும் அதைப்பற்றி எல்லாம் போட்டு மனதில் குழப்பிக்கொள்ள வேண்டாம். பொறுமையாக இருங்கள் மனதை நிதானமாக வைத்துக்கொள்ளுங்கள். மாலை நேரங்களில் எப்பொழுதும் நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் பச்சை நிறம்.

Categories

Tech |