கொரோனா தொடங்கிய காலகட்டத்தில் இருந்து நாடுமுழுவதும் கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளில் கல்வி கற்பதை போல இந்தியாவும் இணைய கல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. தமிழகமும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே இணையவழி கல்வி குறித்து அறிவிப்பை வெளியிட்டது. இந்த சூழலில்தான் தமிழக அரசு பள்ளிகளிலும் இணையதளம் வகுப்புக்கான பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. அதில், மாணவர்கள் பாடங்களை கற்பதற்காக 297 காணொளிகள் தயார் நிலையில் உள்ளது என பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். tiny.cc/veetupalli-ல் இந்த காணொளிகளை பள்ளி முதுகலை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பாடங்கள் சார்ந்த பிரிவு மாணவர்களுக்கு மடிக்கணினியில் ஆசிரியர்கள் பதிவிறக்கம் பதிவிறக்கம் செய்து தரவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.