தமிழகத்தில் சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் குறைவான தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அனைத்து மாவட்டங்களிலும், தனிமனித இடைவெளியை ஒழுங்குபடுத்தவும், மக்கள் கூடுவதை தவிர்ப்பதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ரேஷன் கடைகளில் மக்களுக்கு வினியோகிக்கும் பொருட்களை வாங்க டோக்கன் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆகஸ்ட் மாதத்துக்கான ரேஷன் பொருட்களை பெறுவதற்கு இன்று வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொருட்களை வழங்க உள்ள நிலையில் இன்று, 3, 4 ஆம் தேதிகளில் டோக்கன் வழங்கப்பட உள்ளது.