Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் – திடீர் உத்தரவு …!!

தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று விஸ்வரூபமெடுத்து பரவி வரும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீட்டிற்குள் முடங்கி இருக்கும் பெற்றோர்கள் குழந்தைகளின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இதனிடையே அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் கல்வி கட்டணத்தில் 40 சதவீத கட்டணத்தை மட்டும் பள்ளிகள் வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்திருந்தது.

உயர்நீதிமன்ற உத்தரவை மீறி பல பள்ளிகள் வசூல் செய்ததாக புகார் எழுந்தது. இதை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது தமிழக அரசின் முக்கிய முடிவை எடுத்துள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை மீறி முழு கல்விக் கட்டணத்தையும் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரை கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 2020 –  2021 ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தில் 40 % தொகையை மட்டும் வசூலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சில பள்ளிகளில் முழு கட்டணத்தை கேட்பதாக புகார் எழுந்துள்ளது.

Categories

Tech |