Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேலை வாங்கி தருவதாக கூறி… கூலித் தொழிலாளியிடம் 30,000 ரூபாய் மோசடி… போலீஸ் விசாரணை…!!

டிரைவர் வேலை வாங்கி தருவதாக கூறி கூலித் தொழிலாளியிடம் முப்பதாயிரம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேய்க்குளம் என்ற ஊரில் விறகு கடையில் கூலி வேலை பார்த்து வருகிறார் மனுவேல்(60). அவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் சாத்தான்குளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தான் பணியாற்றுவதாகவும் அதில் ஓட்டுநர் வேலை காலியாக உள்ளது என கூறி நம்பவைத்து மனு வேலுக்கு அந்த வேலையை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.30 ஆயிரம் முன்பணம் கேட்டுள்ளார். அதனால் மனுவேல் வீட்டிிலுள்ள நகையை அடகு வைத்து ரூ.30 ஆயிரத்தை கொடுத்து, தனது மகனுக்கு வேலையை வாங்கி கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நபர் தனது செல்போன் எண்ணை கொடுத்துவிட்டு, பேய்க்குளம் வந்து விட்டு போன் செய்யுமாறு கூறிச் சென்றுள்ளார். அதேபோல் குறித்த இடத்திற்கு சென்ற மனுவேல் அவரை அழைத்த போது செல்போன் அணைத்து வைக்கப்படிருந்தது. அவரும் அந்த இடத்திற்கு வரவில்லை. அதன்பின் தான் ஏமாற்றப்பட்டத்தை மனுவேல் அறிந்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளார். காவல்துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |