Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“அரசு உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே இறைச்சி வெட்டலாம்”… மீறினால் நடவடிக்கை… சென்னை மாநகராட்சி உத்தரவு…!!

உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே இறைச்சிகள் வெட்டப்பட வேண்டும், மீறினால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயர் நீதிமன்ற இடைக்கால உத்தரவின் பேரில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் உரிமம் பெற்ற இறைச்சிக் கடைகளில் மட்டுமே மத நிகழ்வுக்காகவும், வழிபாட்டிற்காகவும் இறைச்சிகள் வெட்டப்பட வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்படாத இடங்களில் விலங்குகள் வெட்டப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இது இன்று நடைபெறவுள்ள பக்ரீத் பண்டிகைக்கும் பொருந்தும்.

எனவே, உயர் நீதிமன்ற உத்தரவின்படி வியாபாரிகளும் பொதுமக்களும் இறைச்சிக் கூடங்களைத் தவிர்த்து பிற இடங்களில் இறைச்சிகள் வெட்டக் கூடாது என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த உத்தரவை மீறி நடப்பவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |