Categories
மாநில செய்திகள்

பிளாஸ்மா தானம் செய்தால் ரூ 5,000 வழங்கப்படும் – ஜெகன் மோகன் அதிரடி அறிவிப்பு..!!

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்தால் அவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஆந்திர முதல்-மந்திரி அறிவித்துள்ளார். 

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி மக்களிடையே பெரும் அச்சுறுத்தலையும், பாதிப்பையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளும் மிகத்தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மேலும் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.கொரோனா தொற்றில்  இருந்து மீண்டவர்களின் பிளாஸ்மாக்களை பயன்படுத்தி, தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்வதற்கு மத்திய, மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்வதற்கு முன் வந்தால், அவர்களுக்கு 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தகவல் வெளியிட்டுள்ளார். மேலும் ஆந்திராவில் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார். ஆந்திராவில் சென்ற மூன்று நாட்களாகவே தினமும் பத்தாயிரத்துக்கும் மேலானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. அதுமட்டுமன்றி தற்போது வரை 1,40,933 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.63,864 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். 1,349 பேர் தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |