சேலம் மாவட்டத்தில் யாசகம் பெற்ற தந்தையை அவரின் இரு மகன்களே அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே செல்லியம்பாளையம் என்ற பகுதியை சேர்ந்த கெங்கு(80) என்பவர் தனது இரண்டு மகன்களுடன் லட்சுமணதீரத்தம் அப்பகுதியில் வசித்து வருகிறார்.அவர் சென்ற சில தினங்களாக அக்கம் பக்கத்தில் உள்ளவரிடம் சென்று யாசகம் கேட்டுள்ளார். அதனால் கோபமடைந்த கெங்குவின் மகன்கள் சக்திவேல் மற்றும் வெங்கடேசன் இருவரும் அவரை கடுமையாக கண்டித்திருக்கின்றனர். இருந்தாலும் அதனை பொருட்படுத்தி கொள்ளாமல் தொடர்ந்து அவர் யாசகம் பெற்றுள்ளார்.
அதனால் கடும் ஆத்திரமடைந்த மகன்கள் இருவரும் நேற்று அவரை கண்டித்து தாக்கியிருக்கின்றனர். அந்த தாக்குதலில் கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக்திவேல் மற்றும் வெங்கடேசன் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் இந்த சம்பவம் பற்றி அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய இரு நபர்களையும் தீவிரமாக தேடிக் கொண்டிருக்கின்றனர்.