Categories
கரூர் மாவட்ட செய்திகள்

ஆடி 18 அன்று இந்த தவறை செய்யாதிங்க…. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – ஆட்சியர் எச்சரிக்கை

ஆடி18ஐ முன்னிட்டு காவிரி நதிக்கரையின் ஓரத்தில் அமைந்துள்ள புண்ணிய ஸ்தலங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் கோவில்கள் மற்றும் முக்கிய புண்ணிய தலங்கள் உள்ளன . இந்தப் பகுதிகளில், ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ம் தேதியன்று கரூர் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள், புதுமண தம்பதிகள் அனைவரும் ஒன்றாக கூடி ஆடிப்பெருக்கு விழாவினை கொண்டாடுவர். தற்போது கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. ஒரு பொது இடத்தில் அதிகளவில் மக்கள் கூடுவதால் நோய் தொற்று அதிகம் பரவும் பயம் இருப்பதால் , பொதுமக்கள் நலன் கருதி ஆடி 18ம்  தேதி, கரூரில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதி தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவை மீறி நடந்து கொண்டால் அவர்கள் மீதும், அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்தும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர  வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |