உசுலம்பட்டியில் கிணற்றில் விழுந்த மாட்டை காப்பாற்ற பெண்கள் 70 அடி ஆழ கிணற்றில் குதித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உசுலம்பட்டி அருகே உள்ள மேகுலர் கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி என்ற விவசாயி தனது பசு மாட்டை கிணற்றியின் அருகே மேச்சலுக்காக கட்டி வைத்துள்ளார். கிணற்றியின் அருகே மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு எதிர்பாராதவிதமாக 70 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து உள்ளது. இதனை கண்ட மாடசாமியின் மனைவி புவனேஸ்வரி சற்றும் தாமதிக்காமல் துணிச்சலுடன் 70 அடி கிணற்றில் குதித்து பசு மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதை பார்த்த அவரது தோழி சுதா என்பவரும் கிணற்றில் குதித்து பசுமாட்டை மீட்கப் போராடினார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் இரண்டு பெண்கள் மற்றும் மாட்டை கயிறு கட்டி பத்திரமாக மீட்டார்கள். துணிச்சலுடன் கிணற்றில் குதித்த பெண்களை தீயணைப்பு துறையினர் வெகுவாக பாராட்டினர்.