Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு விதிமீறல்… “130 நாட்களில் 19 கோடி வசூல்”… 6 லட்சம் வாகனங்கள் பறிமுதல்… காவல்துறை அதிரடி..!!

தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு மீறி செயல்பட்ட அவர்களிடமிருந்து கோடிக்கணக்கில் அபராதம் வசூலிக்கபட்டிருப்பதாக தமிழ்நாடு காவல்துறையினர் கூறியுள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்கக்கூடிய வகையில் தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் எவரும் அவசியம் இல்லாமல் வெளியே வரக்கூடாது என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் தடை உத்தரவை மீறி வெளியில் வரும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த130 நாட்களில் மட்டும் தடையை மீறி செயல்பட்டதாக 9 லட்சத்து 24 ஆயிரத்து 933 பெயரை காவல்துறையினர் கைது செய்து பிணையில் விடுவித்து இருக்கின்றன. மேலும் 6 லட்சத்து 60 ஆயிரத்து 11 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அபராதத் தொகை 19 கோடியே 35 லட்சத்து 10 ஆயிரத்து 78 ரூபாய் வசூலிக்கப்பட்டு இருப்பதாகவும் தமிழ்நாடு காவல்துறை கூறியுள்ளது.

Categories

Tech |