Categories
மாநில செய்திகள்

40% தான்…. பெற்றோர்களே ஏமாறாதீங்க….. புகார் கொடுங்க…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!

40 சதவிகிதம் மட்டுமே கல்வி கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதனை விதியை மீறும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பாதிப்பு குறைந்த பிறகே தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆன்லைனில் வகுப்பு எடுப்பதால் அவர்களிடம் கடந்த வருடம் வரை வசூலித்த கட்டணத்தை முழுமையாக வசூலிக்கக்கூடாது. அதில் 40 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிட்டது. அதேபோல், கல்வி கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களை கொண்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து.

அதன் படி 2020-21 ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தில் 40 சதவீதம் தொகையை மட்டுமே வசூலிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சில பள்ளிகள் முழு கல்வி கட்டணத்தை கேட்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இது குறித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் சரியான நடவடிக்கை வேண்டுமெனில், பொதுமக்கள் தாமாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |