Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தடைக்காலம் முடிந்து உற்சாகத்துடன் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடல் பகுதியான அரபிக் கடலில் 45 நாட்கள் தடைக்காலம் முடிந்து மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

மீன்வளத்தை பெருக்க இந்திய கடற் பகுதிகளில் இரண்டு கட்டங்களாக தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற் பகுதியான அரபிக் கடலில் கடந்த மாதம் 15-ம் தேதியிலிருந்து விதிக்கப்பட்ட 45 நாட்கள் தடைக்காலம் நிறைவடைந்தது.

இதனையடுத்து மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 300 விசைப்படகுகளில் உற்சாகமாக புறப்பட்டு சென்றனர். தடைக்காலம் முடிந்து கடலுக்கு செல்வதால் தரமான மீன்கள் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

Categories

Tech |