Categories
தேசிய செய்திகள்

டாக்ஸி டிரைவர்கள் கொலை…. முதலைகளுக்கு விருந்து கொடுத்த கொடூரன்…. எத்தனை பேரை தெரியுமா….?

டாக்ஸி டிரைவர்களை கொலை செய்து முதலைகள் உள்ள கால்வாய்களில் வீசிய கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேவேந்தர் தர்மா என்பவர் 2002ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை 7 டாக்ஸி டிரைவர்களை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். 16 வருட சிறை தண்டனையை அனுபவித்த தர்மா கடந்த ஜனவரி மாதம் 20 நாள் பரோலில் வெளிவந்தார். ஆனால் பரோல் முடிந்தும் சிறைக்கு திருந்தாமல் தர்மா தலைமறைவாகிவிட்டார். காவல்துறையினர் அவரை தேடிவந்த நிலையில் தலைநகரான டெல்லியில் கடந்த புதன்கிழமை அவரை கைது செய்தனர். அவரை விசாரித்ததில் ஒரு விதவைப் பெண்ணுடன் வசித்து வந்ததாகவும் மேலும் தான் நிபந்தனைகளை மீறியதாகவும் சிறைக்கு திரும்ப விருப்பம் இல்லாத காரணத்தாலும் இப்படி செய்தேன் என்று கூறியுள்ளார்.

தனது கடந்த கால குற்றத்தை பற்றியும் தர்மர் கூறியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது:” இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் பட்டம் பெற்ற இவர் ராஜஸ்தானில் உள்ள ஒரு மருத்துவமனையில் 1984 ஆம் ஆண்டு முதல் 11 ஆண்டுகள் வரை கிளினிக் ஒன்று நடத்தி வந்துள்ளார். மோசடி ஒன்றில் ஏராளமான பணத்தை இழந்த தர்மா பணத்திற்காக போலியாக எரிவாயு சிலிண்டர்களை விற்கும் திட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார். அதுமட்டுமல்லாமல் சட்டவிரோதமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக 2004ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார் சுமார் 175 மாற்று அறுவை சிகிச்சைகளை செய்தார் ஒரு அறுவை சிகிச்சைக்கு 1680 டாலர் முதல் 9350 டாலர் வரை பெற்றுள்ளார்.

அதற்குப்பின் உத்திரப்பிரதேசத்தில் ஒரு கூட்டணியுடன் இணைந்து மற்றொரு திட்டத்தையும் தீட்டியுள்ளார். கால் டாக்ஸிகளை புக் செய்வது போன்று செய்து அதன்பின் டாக்சியை ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளுக்கு அழைத்து சென்று டாக்ஸி டிரை கொலை செய்துவிட்டு காவல்துறையில் சிக்காமல் இருப்பதற்காக சடலங்களை முதலைகள் இருக்கும் கால்வாய்களில் வீசிவிடுவார். பிறகு காரின் பானங்களையோ அல்லது முழுமையாகவோ விற்று பணம் சம்பாதித்து வந்துள்ளார். சுமார் 50க்கும் மேற்பட்ட டாக்ஸி டிரைவர்களை கொலை செய்ததாக காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டார்”. தற்போது சில கொலைகளுக்கு மட்டுமே தண்டனை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |