தமிழகத்தில் 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான ஆன்லைன் சேர்க்கை தொடங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதை தொடர்ந்து அவர்கள் உயர்கல்விக்கு செல்வதற்கு ஏதுவாக உயர்கல்வி நிறுவனங்களும் மாணவர் சேர்க்கை நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தற்போது சட்ட கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று என்று அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், தமிழகத்தில் 5 ஆண்டு சட்டப் படிப்புக்கான மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் சேர்க்கை தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சட்டப் படிப்பில் சேர விரும்புவர்கள் வரும் 5ம் தேதி முதல் www.tndalu.ac.in என்ற தலத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.