Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான்-ஆப்கான் எல்லையில் திடீர் தாக்குதல்… அப்பாவி மக்கள் 15 பேர் பலி… 60 க்கும் மேற்பட்டோர் படுகாயம்…!!

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே நடந்த மோதலில் விழாக்களுக்கு வந்த மக்களில் 15 பேர் கொல்லப்பட்டு 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக ஆப்கான் அரசு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் சாதாரணமில்லாத நிலை நிலவிவருகிறது. அவ்வப்போது இரு நாட்டு ராணுவப் படைகளும் தாக்குதல் நடத்திக் கொள்வது வாடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தான் தனது 2,500 கிமீ எல்லையைச் சுற்றி வேலி ஒன்றை 2017ம் ஆண்டு அமைக்க தொடங்கியது. இதன் மூலம் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடிக்க தொடங்கியது. இதனால் பயங்கரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்க வேலி அவசியம் என்பதில் பாகிஸ்தான் உறுதியாக இருந்தது. இரு நாட்டின் பயங்கரவாதிகளும் வெவ்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் பொதுமக்கள் 15 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.

இது பற்றி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”நேற்று சாமன்-ஸ்பின் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்திற்கும் ஆப்கானிஸ்தான் ராணுவப் படைக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது, அப்பகுதியில் விழாவிற்காகக் கூடியிருந்த பொதுமக்கள் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 60க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தகைய தாக்குதல் தொடர்ந்தால் ஆப்கானிஸ்தான் தக்க பதிலடி கொடுக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன், ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு குனார் மாகாணத்தில் பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |