சச்சின் டெண்டுல்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழைய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 24 ஆண்டு காலம் விளையாடி கடந்த 2013 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர் சச்சின் டெண்டுல்கர். சர்வதேச கிரிக்கெட்டில் 68 அரை சதங்களையும், 51 சதங்கள் அடித்தவர். கிரிக்கெட் உலகில் இவரின் சாதனைகளை இதுவரை எவரும்முறியடிக்கவில்லை. கொரோனா காரணத்தால் வீட்டில் முடங்கியுள்ள சச்சின் டெண்டுல்கர் அவ்வபோது புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் மழையில் நனைந்தபடி உள்ள புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் “ஒருகாலத்தில் மழை தான் அனைவரது பிரச்சனையாகவும் இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.