Categories
டெக்னாலஜி பல்சுவை

மேலும் 19 Apps-க்கு தடை – உடனே நீக்குக …!!

சில மாதங்களாக பாகிஸ்தானை போல சீனாவும் இந்தியாவுக்கு எதிர் நிலையில் நின்று சீண்டி கொண்டிருக்கின்றது. சீனாவுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருவது உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தி உள்ளது. அண்மையில் நடந்த மோதலில் கூட இந்திய வீரர்கள் 20 பேர் சீன ராணுவத்தினரால் வீரமரணம் அடைந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் செயலிகளை  மத்திய அரசு தடை செய்திருந்தது.

நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிப்பதை தடுப்பதற்கும், நாட்டின் பாதுகாப்பை  உறுதி செய்து பாதுகாப்பு நலன் கருதி இந்த நடவடிக்கை எடுத்தாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து ஆன்லைனில் உள்ள ஆபத்தான  செயலிகள் குறித்த விவாதம் எழுந்தது. உலக அளவில் ஆபத்தான இருக்கும்  செயலிகள் குறித்தன விவாதம் எழுந்ததைத் தொடர்ந்து, தற்போது கூகுள் நிறுவனம் பயனாளிகளின் தகவல்களைத் திருடும் 19 செயலிகளை தடை விதித்துள்ளது.

மேலும் ஆண்ட்ராய்ட் பயனாளர்களிடம் இந்த செயலிகளை போனிலிருந்து நீக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது. Auto Picture Cut, Color Call Flash, Square Photo Blur, Square Blur Photo, Magic Call Flash, Easy Blur, Image Blur, Auto Photo Blur, Photo Blur, Photo Blur Master, Super Call Screen, Square Blur Master, Square Blur, Smart Blur Photo, Smart Photo Blur, Super Call Flash, Smart Call Flash, Blur Photo Editor, Blur Image, ஆகியவை ஆகும்.

Categories

Tech |