Categories
சினிமா தமிழ் சினிமா

திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இணையாக பாரதிராஜாவின் தலைமையில் உதயமான புதிய சங்கம்….!

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இணையாக புதிய சங்கம் பாரதிராஜாவின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தலைவராக விஷால் இருந்த பதவிக்காலம் முடிவடைந்து உள்ளது. சங்கத்திற்கு தேர்தல் நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் ஊரடங்கினால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இன்னொரு புதிய சங்கம் உருவாக்கியுள்ளனர். ‘தமிழ் திரைப்பட நடிப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ சங்கத்திற்கு பெயர் வைத்துள்ளனர். சங்கத்திற்கு தலைவராக பாரதிராஜாவை தேர்வு செய்துள்ளனர். எஸ்.ஆர். பிரபு மற்றும் தனஞ்ஜெயன் துணைத் தலைவராகவும், டி. சிவா பொதுச்செயலராகவும், தியாகராஜன் பொருளாளராகவும், லலித் குமார், சுரேஷ் காமாட்சி போன்றோர் இணைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இச்சங்கத்தின் ஆதரவு தயாரிப்பாளர் ஒருவர் கூறியதாவது ” தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தல் நடத்தப்படாமல் இருக்கிறது. இதனால் தயாரிப்பாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய முடியவில்லை. எனவே அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும் படம் எடுப்பவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் இச்சங்கம் பாடுபடும். தற்போது படம் எடுத்துக்கொண்டு இருப்பவர்களுக்காகவே சங்கம் உருவாகியது. உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு போட்டியான சங்கம் கிடையாது ” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |