Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இளைஞர்களே…! சவால்கள் எப்படி ? கேட்க ஆவலாக உள்ளேன் – மோடி உரை ..!!

புதுமையான பொருட்களை கண்டுபிடிப்பதை ஊக்குவிக்க ஆண்டுதோறும் ஹேக்கத்தான் நடத்தப்படுகிறது.  ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020ன் இறுதிச்சுற்றில் பிரதமர் மோடி இன்று மாலை 4:30 மணிக்கு உரையாற்றினார். 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கவுள்ள நிலையில், உலகிலேயே முதன்முறையாக நடத்தப்படும் ஆன்லைன் ஹேக்கத்தான் இறுதிச்சுற்றில்காணொலியில் உரையாற்ற்றினார் பிரதமர்.

இதில் கோவையை சேர்ந்த மாணவியிடம் வணக்கம் தெரிவித்து தனது கலந்துரையாடலை பிரதமர் மோடி தொடங்கினார். மழைப் பொழிவை அறிந்து கொள்ளும் தொழில்நுட்பம் குறித்து கோவை மாணவி தெரிவித்தது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார்.

உலகத்தரத்தில் நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் அனைவருக்குமான சுகாதார வசதியை ஏற்படுத்த வேண்டும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் கிராமப்புறங்களில் மாற்றங்களை உருவாக்கி வருகிறது. இளைஞர்கள் சவால்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை கேட்க ஆவலாக உள்ளேன் என்று  தெரிவித்தார்.

 

Categories

Tech |