தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருகின்றார்.
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. பாஜாகாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 நாடாளுமன்ற தொகுதியில் ஓன்று கோவை நாடாளுமன்ற தொகுதி. இதில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் நடராஜனும் அதிமுக கூட்டணியில் பாஜகவை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் கோவை வரும் பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருகின்றார்.
மேலும் கோவை கொடீசியா மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில், பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரதமர் மோடி பேசுகிறார்.இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும், அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.பிரதமரின் கோவை வருவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் வருகிற 13 ஆம் தேதி தேனியில் நடக்கும்பொதுக்கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்தை ஆதரித்து பிரதமர் பிரசாரம் செய்ய இருக்கின்றார்.