Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாணவர்கள் தற்கொலை… “இனி ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாது”… அமைச்சர் செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டத்தில் வாய்க்காலுக்கு முதல் போக பாசனத்திற்காக அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கே.சி.கருப்பணன் தண்ணீரை திறந்து வைத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கொடிவேரி தடுப்பணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை ஆகிய வாய்க்காலுக்கு முதல்போக பாசனத்திற்கு அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கே.சி.கருப்பணன் ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தார்கள்.அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “ஈரோடு மாவட்டத்தில் தடுப்பணைகள் கட்டப்பட்டு கொண்டிருக்கின்றன. தடுப்பணைகளில் இணைப்பு சாலை தேவைப்படும் என்றால் பொதுப்பணித்துறை ஆய்வு செய்து முடிவு செய்வார்கள்.

ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரையில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் அனைத்தும் கையிருப்பு இருக்கின்றன. தஞ்சை சிறப்பு மண்டலமாகவும் தென் மாவட்டத்திற்கு தேவையான தண்ணீர் திறப்பு இருப்பதாலும் தமிழ்நாட்டில் விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். இந்தியாவிலேயே உணவு உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது” எனக் கூறியுள்ளார்.மேலும் செல்போன் இல்லாத காரணத்தால் ஆன்லைன் வகுப்புகளில் சேர இயலாத நிலையில் 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பற்றி அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், இவ்வாறு இனிவரும் காலங்களில் ஒரு உயிர் கூட போகாது என கூறியுள்ளார். அதே சமயத்தில் பத்தாம் வகுப்பு தனித்தேர்வு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |