Categories
தேசிய செய்திகள்

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மாநிலங்களவை உறுப்பினர்… சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…!!

சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான அமர்சங் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று காலமாகியுள்ளார்.

சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான அமர் சிங், நீண்ட காலமாகவே உடல் நலம பாதிக்கப்பட்டு சிறுநீரகம் செயலிழந்த நிலையில், மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இதனிடையே, சிங்கின் உடல் நிலை மோசமடையவே சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இன்று (ஆகஸ்ட் 1) பாலகங்காதர திலகரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புகழாரம் சூட்டும் வகையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் சமூக வலைதளத்தில் தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வந்துள்ளார்.அவர் வெளியிட்ட ஒரு கருத்தில் “கொரோனாவுக்கு எதிரான போரில் பிரதமர் மோடிக்கு அனைவரும் ஆதரவாக செயல்பட வேண்டும்” என பதிவிட்டிருந்தார்.

தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப்பெற்றது. இதையடுத்து, காங்கிரஸ் ஆட்சி கவிழாமல் இருக்கும் நோக்கில் அமர் சிங் மேற்கொண்ட முயற்சிகள் மூலம் சமாஜ்வாதி தனது ஆதரவை காங்கிரஸ் கட்சிக்கு அளித்தது. சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவர் முலாயம் சிங்குக்கு நெருக்கமானவராக கருதப்பட்ட அமர் சிங், கருத்து வேறுபாடு காரணமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர், தனிக்கட்சி தொடங்கி சோபிக்காத நிலையில், அரசியலிலிருந்து விலகினார். இருப்பினும், 2016ஆம் ஆண்டு, சமாஜ்வாதி கட்சியின் ஆதரவோடு மாநிலங்களவை உறுப்பினரானார்.

Categories

Tech |