அரசியல் குழப்பம் நீடித்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏக்கள்,ஜெய்ப்பூரிலிருந்து ஜெய்சால்மர் நகருக்கு நேற்று இடம் மாறினர்.
அதிர்ப்தி எம்.எல்.ஏக்கள் மீதான நடவடிக்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் காங்கிரஸ் கொறடா மனுதாக்கல் செய்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் அவர்களது எம்.எல்.ஏக்கள் அனைவரும், கடந்த 13 ஆம் தேதியிலிருந்து ஜெய்ப்பூர் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்கி இருந்தனர். அவர்கள் அனைவரும் மூன்று விமானங்களில் 550 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜெய்சால்மருக்கு நேற்று புறப்பட்டு சென்றனர். ஜெய்சால்மர் சென்ற பிறகு பலத்த பாதுகாப்புடன் பேருந்து மற்றும் வேன்களில் உள்ள விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில் ராஜஸ்தானின் முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 காங்கிரஸ் அதிர்ப்தி எம்எல்ஏக்கள் மீது சட்டபேரவை தலைவர் தகுதி நீக்க நடவடிக்கை எடுப்பதற்கு, உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து காங்கிரஸ் கொறடா, மகேஷ் சோசி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் காங்கிரஸ்அதிர்ப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சட்ட விரோதமானது என்றும், கர்நாடகா அரசியல் பிரச்சினை தொடர்பாக கடந்த 1992ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் எம்எல்ஏக்கலாய் தகுதி நீக்கம் செய்வது குறித்து பேரவைத் தலைவரே முடிவு எடுக்க வேண்டும் என்றும், இவ்விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டத்தை அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.