புதுச்சேரியில் முன்னாள் எம்எல்ஏ திரு மனோகர் உட்பட அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மாற்று கட்சியில் இருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.
புதுச்சேரியில் மாற்று கட்சியினர் அமமுக வில் இணையும் விழா கழகத் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கழக துணை பொதுச்செயலாளர் திரு எம் ரங்கசாமி, கழக அமைப்புச் செயலாளர் திரு அருள், மாநில செயலாளர் வழக்கறிஞர் திரு வேல்முருகன் ஆகியோர் முன்னிலையில் முன்னாள் எம்எல்ஏ திரு மனோகர், தாக்கூர் முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் பாவாடை, அதிமுக உழவர்கரை அம்மா பேரவை செயலாளர் அனிதா ஆர் கணேசன், முன்னாள் ஐ அம் டியுசி மாநிலச் செயலாளர் திரு கன்னிதெலு,
முன்னாள் காங்கிரஸ் எஸ்இ எஸ்டி பிரிவு துணைத் தலைவர் திரு பக்தவச்சலம் பிரேம், முன்னாள் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் திரு கணேசன், முன்னாள் உப்பளம் வட்டாரம் காங்கிரஸ் துணைத் தலைவர் திரு குப்புசாமி, முன்னாள் உப்பளம் வட்டாரம் காங்கிரஸ் இளைஞர் அணி பொதுச் செயலாளர் திரு விஷ்ணு வீடணன், திரு கோபி சங்கர் ஆகியோர் அதிமுகவில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கழக துணைப் பொதுச் செயலாளர் திரு எம் ரங்கசாமி மக்களை பாதிக்கக்கூடிய எந்த ஒரு நடவடிக்கையாக இருந்தாலும் அதனை தட்டிக் கேட்கும் ஆற்றல் மிக்க தலைவராக திரு டி டி வி தினகரன் திகழ்வதாக குறிப்பிட்டார்