ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியை மேலும் மூன்று மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்க கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர்க்கான சிறப்பு சலுகையை நீக்கி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதனால் பிரச்சனை ஏற்படாமலிருக்க முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட பல தலைவர்கள் காவலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் மெகபூபா தடுப்புக்காவல் வரும் ஐந்தாம் தேதியில் முடிவு பெறுகிறது. ஆனால் காவலை மேலும் மூன்று மாதங்கள் நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மெகபூபா மகள் இல்.டி.ஜ முக்தி வெளியிட்டுள்ள செய்தியில் தமது தாயாருக்கு தடுப்புக்காவல் நீட்டிப்பு பக்ரீத் பண்டிகை பரிசு என்று விமர்சித்துள்ளார். தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா உள்ளிட்ட பலர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டனர்.