கன்னியாகுமரி மாவட்டத்தில் போலி முகவரி கொடுத்து பரிசோதனை செய்ததால் கொரோனா நோய் தொற்று பாதித்த பலரை அடையாளம் காணமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குமரியில் கொரோனா பரிசோதனை செய்து கொண்ட பலர் உரிய முகவரி கொடுக்காமல் சென்றதால் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் கண்டறிய முடியவில்லை. அவர்கள் கொடுத்த முகவரியில் விசாரிக்கும்போது அது போலியானது என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்களை தேடி கண்டு பிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். இதனால் கொரோனா பாதித்தவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை நான்காயிரத்து ஏழு நூற்றுக்கு மேற்பட்டோர் நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். இதில் ஆயிரத்து 700 பேர் மருத்துவமைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வரும் நிலையில,கொரோனா பரிசோதனைக்கு ஆதாரை கட்டாயப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.