கோவிலில் பெண்ணின் சடலம் காயங்களுடன் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அய்யனார் கோவிலில் உடலில் காயங்களுடன் அரை நிர்வாண நிலையில் பெண் சடலம் கிடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற ராமநத்தம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை செய்ததில் அந்த பெண் கல் பூண்டில் அருகிலுள்ள வனகராபூண்டி கிராமத்தை சேர்ந்த அழகுவேல் என்பவரின் மனைவி கருப்பாயி என தெரியவந்தது. இவருடைய கணவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், கீலகல் பூண்டியில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்துள்ளார்.
நேற்று வழக்கம்போல வேலைக்கு சென்ற கருப்பாயி வீடு திரும்பவில்லை. இந்நிலையில் கருப்பாயி உடலில் காயங்களுடன் அரை நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதால் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.