நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்க வருகின்ற 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் அங்குள்ள சூழ்நிலைக்கு தகுந்தவாறு தளர்வுகளை மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து மாநில அளவிலான அறிவிப்புகளும், உத்தரவுகளும் வெளியிடப்படுகின்றன.
அந்த வகையில் தமிழகம் முழுவதும் நாளை தளர்வின்றி முழுமுடக்கம் கடைபிடிக்கப்படும் என தமிழகஅரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. நாளை பால் வினியோகம், மருந்தகங்கள், மருத்துவமனைகள், குறைந்த அளவிலான பெட்ரோல் பங்க்கில் மட்டுமே இயங்கும். மதுக்கடைகள், காய்கறி, மளிகை கடைகள், உணவகங்கள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.