ஒரு பெண் தனது வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணியான பூனை மனிதனைப்போல பேசுவதை வீடியோவாக படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
செல்லப் பிராணியான பூனை வளர்த்து வரும் பெண்ணின் கேள்விகளுக்கு மனிதர்கள் கூறுவதுபோல் ஆமாம் போடுவதும் ஆச்சரியப்படுவது போன்று பேசி குரல் கொடுத்திருப்பது இன்ஸ்டாகிராமில் தற்போது வைரலாகி வருகிறது. மிகிதா என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த கருப்பு பூனையின் வீட்டு உரிமையாளர் பேசும் போது மனிதர்கள் போலவே குரல் கொடுத்து பதிலளித்து வருகிறது.
உணவு வேண்டுமா என்ற கேள்விக்கு “ஆங்” என்று கூறி ஆச்சர்யப்பட வைக்கிறது. இன்ஸ்டாகிராமில் “சிகாகோ பிளாக் கேட்” என்ற பெயரில் இந்த பூனையின் உடைய வீடியோக்கள் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. மேலும் அந்த இன்ஸ்டாகிராம் ஐடியை அந்த பூனையை இயக்குவது போல அதன் பெயர் கொண்டே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த பூனை பக்கத்தில் இரண்டு லட்சத்துக்கும் மேலானோர் ஃபாலோ செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/p/CDUwDgWhbzy/?utm_source=ig_web_copy_link