Categories
தேசிய செய்திகள்

நாட்டு மக்களுக்கு – பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு ..!!

இன்று மாலை 5 மணிக்கு புதிய கல்வி கொள்கை விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசினார். அதில் புதிய கல்விக் கொள்கை குறித்து விளக்கம் அளித்த பிரதமர் மோடி, புதிய கல்விக் கொள்கை மூலம் மாணவர்களுக்கான பாட சுமை குறைக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கமே கற்றல் ஆய்வு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தான். இதன் மூலம் அனைவருக்குமான கல்வி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  மனப்பாட முறையிலிருந்து சிந்தனை முறைக்கு இது வழிவகுத்துள்ளது.

இருபத்தியோராம் நூற்றாண்டில் இளைஞர்களின் வளர்ச்சியை மனதில் வைத்தே புதிய கல்விக் கொள்கை கட்டமைக்கப்பட்டுள்ளது.  அந்தந்த மாணவர்கள் தாய்மொழியில் கல்வி கற்க இதன் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தாய்மொழி மூலம் படித்து மாணவர்கள் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். வேலை தேடுபவர்களை உருவாக்காமல் வேலையை உருவாக்குவோரை கல்விக்கொள்கை உருவாக்கம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

Categories

Tech |