Categories
தேனி மாவட்ட செய்திகள்

அப்பாவி பெண் பலாத்காரம்…. 7 ஆண்டுகள் கழித்து….. குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை…!!

தேனி மனவளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியை அடுத்த தொப்பம்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் செந்தில். கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்த இவர், அதே பகுதியில் மனவளர்ச்சி குன்றிய பெண் ஒருவரை நீண்ட நாளாக  நோட்டமிட்டு வந்துள்ளார்.  அவர் மனவளர்ச்சி குன்றியவர் என்பதை அறிந்தவுடன்,  பெற்றோர்கள் இல்லாத நேரம் பார்த்து வீட்டிற்குள் நுழைந்து அந்த அப்பாவி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இது குறித்து அறிந்த அவரது பெற்றோர்கள் உடனடியாக தேனி மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், செந்திலை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த சம்பவம் கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்றது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக நடைபெற்று வைத்த  இந்த வழக்கின் இறுதி விசாரணை தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்தது.

இதை விசாரித்த நீதிபதியான ராஜராஜேஸ்வரி குற்றவாளிக்கு தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில், பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியான செந்திலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூபாய் 1000 அபராதம் விதித்து உத்தரவிட்டதோடு அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு கூடுதலாக சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அதேபோல் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு நிவாரண தொகையாக ரூபாய் 5 லட்சம் வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து குற்றவாளி காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Categories

Tech |