Categories
மாநில செய்திகள்

வீடுகளிலேயே ஆடிப்பெருக்‍கை கொண்டாட தயாராகும் பெண்கள் …!!

ஆடிப்பெருக்கு இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கால்  காவிரி ஆற்றில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகையை போலவே ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பெருக்கு விழ வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். காவிரித் தாய்க்கு நன்றி செலுத்தும் வகையில் புதுமண தம்பதிகள் நீர் நிலைகளில் புனித நீராடி வழிபாடு செய்து பெரியோரிடம் ஆசி பெறுவார்கள். ஆடி பதினெட்டாம் நாளான இன்று ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ்  ஊரடங்கு காரணமாக, காவிரி ஆற்றிலும், நீர்நிலைகளிலும் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்சியில் அம்மா மண்டபம் மற்றும் காவிரி ஆற்றங்கரையில் பெண்கள் வழிபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடை உத்தரவு அமலில் உள்ளதால், ஆடிப்பெருக்கையொட்டி காவிரி ஆற்றின் கரையோரங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படுவதாக, கரூர் மாவட்ட ஆட்சியர் திரு அன்பழகன் தெரிவித்துள்ளார். கும்பகோணத்திலும் காவிரி ஆற்றங்கரையில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், தங்கள் வீடுகளிலேயே ஆடிப்பெருக்கை கொண்டாட பெண்கள் தயாராகி வருகின்றனர். ஆடிப்பெருக்கை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் நீராடுவதற்கும் பூஜைகள் மற்றும் சடங்குகள்  செய்வதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தடையை  மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மேதராஜ் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |