Categories
மாநில செய்திகள்

ஆகஸ்ட் 5 முதல் 12 வரை…. +1… +2 மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமாகும் நிலையில், முதற்கட்டமாக ப்ளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, ஜூலை 31 ஆம் தேதியன்று மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.

இந்நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 5 முதல் 12 வரை 8 நாட்கள் பிளஸ் 1 மாணவர்கள் தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிளஸ் 1 மாணவர்கள் ஆகஸ்ட் 5 முதல் 12 ஆம் தேதி வரையும், பிளஸ் 2 மாணவர்கள் ஆகஸ்ட் 5 முதல் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |