Categories
உலக செய்திகள்

எச்சரிக்கைக்கும் அளவில்லையா…? பணத்தை வாஷிங்மெஷினில் துவைத்த நம்பர்…. பின்னர் ஏற்பட்ட சோகம்….!!

தென்கொரிய நாட்டில் வாசிங்மிஷின் மூலமாக 50 ஆயிரம் தென்கொரிய ரூபாய் நோட்டுகள் சலவை செய்ய முயற்சி செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்கொரியாவில் கொரோனா பரவி விடும் என்ற அச்சத்தில் ரூபாய் நோட்டுகளை வாஷிங் மெஷினில் போட்டு துவைக்கப்போக அந்த முயற்சியானது மிகப் பெரிய நஷ்டத்தில் முடிந்துள்ளது.  குடும்பத்தில் நடக்க இருந்த இறுதி சடங்கு ஒன்றிற்காக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரிடமிருந்தும் பெற்ற 50 ஆயிரம் தென் கொரிய ரூபாய் நோட்டுகள் அனைத்தும் வீணாகி உள்ளன. கொரோனா காரணமாக தென் கொரிய மக்கள் அனைவரும் ஒவ்வொரு நாளையும் மிகவும் எச்சரிக்கையுடன் கழித்து கொண்டிருக்கின்றனர். அதனால் தினம்தோறும் அவர்கள் அனைவரும் தொற்று வந்து விடக் கூடாது என்ற அச்சத்தில் பொருட்களின் மேற்பகுதியை கிருமி நாசினிக் கொண்டு சுத்தம் செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.அவ்வாறு செய்கையில் பெரும்பாலானோர் பொருள்களை நீரில் கழுவுகின்றனர். அது சிலருக்கு பாதுகாப்பாகவும் சிலருக்கு நஷ்டத்தை கொடுப்பதாகவும் அமைந்து விடுகிறது.

அப்படி தான் சியோலில் ஒருவருக்கு நடந்துள்ளது. அவர் தன்னிடம் இருந்த பணத்தை வாஷிங் மெஷினில் போட்டு துவைத்தால் பணத்தில் இருக்கும் வைரஸ் போய்விடும் என்ற எண்ணத்தில் சலவை செய்துள்ளார். ஆனால் நடந்தது அவருக்கு பெரும் இழப்பையே கொடுத்துள்ளது. அவர் இறுதி சடங்கிற்காக வைத்திருந்த அனைத்து பணத்தையும் முழுவதுமாக இழந்து விட்டார். அந்தப் பணத்தினை திரும்பவும் பயன்படுத்த இயலாத அளவிற்கு வாசிங்மிஷின் சுக்குநூறாக கிழித்தெறிந்துவிட்டது. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக கொரியா வங்கிக் கிளைக்கு சென்று கூறியுள்ளார். ஆனால் அவர்கள் சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற இயலாது என கூறிவிட்டார்கள். அதன் பின்னர், அவரின் நிலையை அறிந்து பாதி மதிப்புக்கு பணத்தை கொடுத்ததாக கூறப்படுகின்றது.

Categories

Tech |