பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறும் வரலாற்று நிகழ்வான ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் ராமர் கோயிலுக்கு அடித்தளம்யிட்ட அத்வானிக்கு அழைப்பு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
1990 ஆம் ஆண்டு மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் மண்டல் குழுவின் பரிந்துரைகளை அன்றைய பிரதமர் விபி சிங் நடைமுறைப்படுத்தினார். இதற்கு எதிராக ஆதிக்க சாதி மாணவர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த காலகட்டத்தில் விபி சிங் அரசுக்கு பாஜக வெளியில் இருந்து ஆதரவு அளித்து கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் பாஜக தலைவர்களில் ஒருவரான எல்.கே அத்வானி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை வலியுறுத்தி ரத யாத்திரை மேற்கொண்டிருந்தார். குஜராத் மாநிலம் சோனாத்தில் தொடங்கிய, அத்வானியின் ரத யாத்திரை எண்ணிலடங்கா பரிவாரங்களுடன் நாளொன்றுக்கு 300 கிலோ மீட்டர் தொலைவு என்ற இலக்குடன் பயணம் மேற்கொண்டது.
பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்கு அத்வானியும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், அவரது ரதயாத்திரை வட இந்தியாவில் மதம் மற்றும் சாதி ரீதியான கலவரத்தை தூண்டுவதாக குற்றம் சாட்டப்பட்டது. குஜராத்தில் இருந்து கிளம்பிய அத்வானியின் ரத யாத்திரை மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை கடந்து பீகாருக்கு சென்றது. அப்போது விபி சிங்யின் கூட்டணிக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் முதலமைச்சராக இருந்தார். அத்வானி செல்லும் இடங்களில் கலவரங்கள் அதிகரிக்க தொடங்கியதால், பாஜகவின்ஆதரவை பற்றி கவலைப்படாமல் அத்வானியை கைது செய்யுமாறு லாலு பிரசாத்திடம் வலியுறுத்தினார் விபி சிங். இதையடுத்து உத்திரப்பிரதேச எல்லையில் நுழைவதற்கு முன்பு, லாலு பிரசாத் யாதவ்வால் அத்வானி கைது செய்யப்பட்டார்.
ஆனாலும் அத்வானியின் கரசேவகர்கள் உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியை நோக்கி சென்றனர். உத்திரப் பிரதேச முதலமைச்சராக இருந்த முலாயம் சிங் யாதவ் கரசேவகர்கள் அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டார். உத்திரபிரதேச போலிஸார் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகளே 16க்கும் மேற்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் தொண்டர்கள் உயிரிழந்தனர். ரத யாத்திரை சென்ற பகுதிகளில் கலவரம் வெடித்தது 500 நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இதனால் விபி சிங் மீது ஆத்திரமுற்ற பாஜக, அவரது அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றதால் ஆட்சி கவிழ்ந்தது. இதன்பிறகு 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் நாள் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின்போது ராமர் கோயில் காட்டுவதற்காக, அயோத்தில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
அத்வானி, முரளி, மனோகர், ஜோஷி சிங்கால் போன்ற தலைவர்கள் முன்னிலையில் லட்சக்கணக்கான கரசேவகர்கள் பாபர் மசூதியை இடித்து அதன் மீது தற்காலிக ராமர் கோவிலை நிறுவினர். இவ்வளவு புகழுக்கும் காரணமான அத்வானிக்கு தான் ஆகஸ்ட் 5 ஆம் நாள் நடைபெறும் ராமர் கோவில் காண பூமி பூஜை விழாவுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. அத்வானியை போல முரளி மனோகர், ஜோஷிக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. பாபர் மசூதியை இடித்தது தொடர்பாக அத்வானி, முரளி, மனோகர்,ஜோஷி, உமா, பாரதி உள்ளிட்ட 32 பேர் மீதான வழக்கு லக்னோ சிபிஐ நீதிமன்றத்தில் தற்போது வரை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.