தமிழகத்தில் கொரோனா தடுப்பு சிகிச்சையில் தமிழக அரசாங்கம் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் சிறப்பாகவே செய்து வருகிறது. அதிகம் தொற்று கொண்ட மாநிலங்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் தமிழகம்… அதிகமானோரை குணப்படுத்திய மாநிலங்கள் வரிசையில் நல்ல நிலையை பெற்றுள்ளது. மருத்துவமனையில் குறைந்த அளவு கொரோனா நோயாளிகளே சிகிச்சை பெற்றுவருகின்றார்கள் என்ற நிலை பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தெரியவந்துள்ளது.
தமிழக்தில் கொரோனா நோயாளிகளுக்கு நல்ல மருத்துவ சிகிச்சை கொடுத்ததன் பலனாகத்தான் அதிகமானோரை குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்து மத்திய அரசு, பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டை பெற்று வருகின்றது. இந்நிலையில் தற்போது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அறிவிப்பை சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 18 மாவட்டங்களில் சித்த மருத்துவ மையம் தொடங்கப்பட்டு உள்ளதாகவும், விரைவில் அனைத்து மாவட்டங்களின் தொடங்க உள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவ கல்லூரிகள் மற்றும் சித்த மருத்துவமனையில் விலையில்லாமல் பெற்று கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.