Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

ரூ 54,94,84,50,00,000…… இந்தியர்களே முதலிடம்….. உலக வங்கி வெளியிட்ட பட்டியலில் தகவல்….!!

வெளிநாடுகளில் வேலை செய்யும்  இந்தியர்கள் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 79 பில்லியன் டாலர்கள் தொகையை இந்தியாவிற்கு அனுப்பியுள்ளனர்.

வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் அவரவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பும் தொகையின் பட்டியலை  உலக வங்கியானது 2018_ஆம் ஆண்டை கணக்கில் எடுத்துக்கொண்டு புள்ளி விவரங்களை வெளியிட்டது. அதில் உலகத்திலேயே இந்தியர்கள் தான் வெளிநாடுகளில் பணி புரிந்து கொண்டு  அதிக தொகையை இந்திய நாட்டுக்கு அனுப்பியுள்ளனர். இது குறித்து வெளியிட்டுள்ள பட்டியல் விவரத்தில் , இந்தியா கடந்த 2018ஆம் ஆண்டில் சுமார் 79 பில்லியன் டாலர்கள் தொகையை பெற்று முதலிடத்தில் உள்ளது.

உலகிலேயே தாயகத்திற்கு பணம் அனுப்புவோர் பட்டியலில் இந்தியா முதலிடம்

மேலும் அந்த புள்ளி விவரத்தில்  , 2016ஆம் ஆண்டில் இந்த தொகை 62.7 பில்லியன் டாலர்க _ளாகவும், 2017ஆம் ஆண்டில் 65.3 பில்லியன் டாலர்களாக இருந்த இந்த தொகை 2018_ஆம் ஆண்டில் 14 சதவீதமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி வெளியிட்ட புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. கேரளாவில் ஏற்றப்பட்ட கனமழை-வெள்ளத்தால் அம்மாநிலத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிவோர் தங்கள் குடும்பத்திற்கு அதிக தொகை அனுப்பியது இந்த உயர்வுக்கு காரணமாக இருக்கலாம் என்று  கணிக்கப்பட்டுள்ளது.

நாடுகளின் வரிசை : 

இந்த அளவிட்டில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக ,

67 பில்லியன் டாலர்கள் அனுப்பப்பட்ட சீனாவும் ,  

36 பில்லியன்கள் டாலர்கள் தொகையைப் பெற்று மெக்சிகோ 3_ஆவது இடத்திலும் , 

பிலிப்பைன்ஸ் 34 பில்லியன் தொகையை கொண்டு 4_ஆவது இடத்திலும் , 

எகிப்து 29 பில்லியன் தொகையுடன் 5_ஆவது இடத்திலும் உள்ளது.

இந்தியர்கள் சுமார் 79 பில்லியன் தொகை இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ 54,94,84,50,00,000.00 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |