குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் தமிழ்நாட்டு காவல்துறையினர் நூலகம் அமைத்து கொடுத்துள்ளனர்.
குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு காவல் அதிகாரிகள் நூலகம் ஒன்றை அமைத்துக் கொடுத்துள்ளனர் இந்த நூலகம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் மாமல்லபுரம் மற்றும் கூவத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இரண்டு நூலகங்கள் உள்ளன இரண்டிலுமே மொத்தம் 500 க்கும் மேலான புத்தகங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் இடம்பெற்றுவருகின்றன. இதில் பெரும்பாலானவை நன்கொடையாக வரப்பட்டது.
மேலும் காஞ்சிபுரம் டிஐஜி சாமுண்டேஸ்வரி நூலகம் அமைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறார். இந்தியாவின் எதிர்காலமாக கருதப்படும் இன்றைய இளம் வயது குழந்தைகளிடம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளோம் என்றும், நூலகத்தின் பராமரிப்பு பணிக்காக இரண்டு பேரை பணியமர்த்த உள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.