பிரபல நடிகர் சோனு சூட் ஆதரவற்ற மூன்று குழந்தைகளை தனது பொறுப்பில் தத்தெடுத்து பாராட்டுகளை குவித்து வருகிறது.
ஊரடங்கு காலத்தில் நடிகர் சோனு சூட் தொடர்ச்சியாக தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் உதவி செய்து வருகிறார். சமீபத்தில் ஆந்திராவில் ஏழை விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தது, காய்கறி விற்றுக்கொண்டிருந்த பெண்ணிற்கு வேலை வாங்கிக் கொடுத்தது போன்ற செயல்களால் பாராட்டுகளை குவித்தவர்.
தற்சமயம் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுப்பது மூலம் இன்னும் மேம்பட்டு உள்ளார். ராஜம் கர்ணன் என்ற பத்திரிக்கையாளர் ட்விட்டரில் ஆந்திர மாநிலத்தில் புவனகிரி சேர்ந்த மூன்று ஆதரவற்ற குழந்தைகளின் புகைப்படத்தை பதிவிட்டு உதவி வேண்டியுள்ளார்.” இனி அவர்கள் ஆதரவற்றவர்கள் இல்லை என் பொறுப்பில் இருப்பார்கள்.” என சோனு சூட் தெரிவித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.