Categories
சினிமா தமிழ் சினிமா

சந்திரமுகி 2 கதாநாயகி யார்…? விளக்கம் கொடுத்த லாரன்ஸ்…!!

‘சந்திரமுகி 2’ திரைப்படம் பற்றி பரவிக் கொண்டிருக்கும் வதந்திகளுக்கு லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகிய சந்திரமுகி படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. அதனை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருந்த நிலையில், 15 வருடங்களுக்குப் பின்னர் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில், வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 திரைப்படம் வர இருக்கிறது என்ற அறிவிப்பு எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மேலும் இப்படத்தில் லாரன்ஸ் நடிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அது மட்டுமன்றி நடிகைகள் ஜோதிகா மற்றும் சிம்ரன் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள் என்று பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் நாயகியாக கியாரா அத்வானி நடிக்க உள்ளார் என்று சில நாட்களுக்கு முன் செய்தி வெளியாகியது.

தொடர்ச்சியாக ‘சந்திரமுகி 2’ படம் பற்றி செய்திகள் வெளியாகி கொண்டிருப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். அதில் “சந்திரமுகி 2″ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா, இம்ரன் மற்றும் கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக வருகின்ற செய்திகள் அனைத்தும் வதந்திகள் ஆகும். தற்போது திரைக்கதை வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.மேலும் கொரோனா சூழ்நிலை ஒரு முடிவுக்கு வந்த பின்னர் தான் தயாரிப்பு நிறுவனம் மூலம் நடிகைகள் பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும்” என்று லாரன்ஸ் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |