இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பாண்டே, டோனியை போலவே சிக்ஸர் அடிப்பதற்கு பயிற்சி மேற்கொண்டு வருகின்ற வீடியோ வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர்களில் டோனியும் ஒருவர். அவர் அனைத்து வீரர்களை காட்டிலும் ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பதில் மிகவும் திறமை வாய்ந்தவர். அவர் இந்திய அணிக்கு வந்த பின்னர் தான் ஹெலிகாப்டர் என்ற வார்த்தை அதிக அளவில் பேசப்பட்டது. ஆனால் சில நாட்களாகவே எந்த ஒரு போட்டியிலும் தோனியின் பழைய ஹெலிகாப்டர் ஷாட்களை பார்க்க இயலவில்லை. இன்னும் சொல்லப்போனால் டோனியின் பேட்டிங் முற்றிலும் மாறிவிட்டது என்றே கூறலாம்.
இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் விரைவில் ஐபிஎல் தொடர் தொடங்க இருப்பதால், அதற்காக வீரர்கள் அனைவரும் கிடைக்கும் நேரத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பயிற்சியில் ரிஷப் பாண்டே டோனியை போன்று ஹெலிகாப்டர் ஷாட்டுகளை அடிக்கும் பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றார். அந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி கொண்டிருக்கிறது.
https://www.instagram.com/p/CCy_F5PlSCA/?utm_source=ig_web_copy_link