கொரோனா தொற்றுக்கு சிகிச்சையில் இருந்தவர் அவரது தந்தையின் இறப்புச் சடங்கில் பாதுகாப்புடன் கலந்து கொண்டு திரும்பி சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த தமிழரசன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மகன் அரங்கநாதன் கொரோனா தொற்றுக்கு புதுக்கோட்டை அரசு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அறிந்த அமைச்சர் விஜயபாஸ்கர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையிடம் பேசி,
அரங்கநாதனை பாதுகாப்பு உடைகளோடு இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்தார். வீட்டுக்குள் செல்லாமல் வாசலிலேயே தந்தையின் உடலுக்கு அரங்கநாதன் இறுதிச் சடங்குகளை செய்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. அமைச்சரின் மனிதாபிமான செயல் அனைவரிடமும் பாராட்டு பெற்றது.