ஏர்வாடி தர்கா அருகே நில அளவை குறிப்பிடும் பதினாறாம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா அருகில் ஏரான் துறை என்ற இடத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான கி.பி பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் மற்றும் அரபு எழுத்துக்கள் உள்ள கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏரான் துறை கஞ்சபள்ளி பகுதியில் உள்ள தோப்பில் ஒரு கல்வெட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் திரு.வே ராஜகுரு அக்கல்வெட்டை படியேடுத்து ஆய்வு செய்தார்.
இதுபற்றி அவர் மேலும் கூறிய போது இக்கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு இதை கி.பி பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதலாம் என்று தெரிவித்தார்.